டேஸ்ட்டி புடலங்காய் கூட்டு பாடு ஒரு பாட்டு

kuttybabuPPT
0
டேஸ்ட்டி புடலங்காய் கூட்டு
பாசிப்பருப்பு - கால் கப் 

சிறிய புடலங்காய் - 2 

காய்ச்சிய பால் - கால் கப் 

மஞ்சள் தூள் - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு 

கடுகு, சீரகம் - சிறிதளவு 

உளுந்தம் பருப்பு - சிறிதளவு

 பச்சை மிளகாய் - இரண்டு 

வெங்காயம் - ஒன்று 

நெய் - ஒரு டீஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிது 

செய்முறை 

பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 புடலங்காயை வட்ட வடிவத்தில் துண்டுகளாக நறுக்குங்கள்.

 கடாயில் தாராளமாக தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை வேக வையுங்கள்.

 அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.

 புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள்.

 பின்னர் கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டுக் கலவையில் கலந்து பரிமாறுங்கள்.

 தாளிப்பு தவிர எண்ணெயில் வறுப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.
 முழுதாக நீரில் தான் வேக வைக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)