ஹோட்டல் ஸ்டைல் மீன் சுக்கா சாப்பிடுங்க பக்கா

kuttybabuPPT
0
ஹோட்டல் ஸ்டைல் மீன் சுக்கா சாப்பிடுங்க பக்கா
தேவையானவை

வஞ்சிரம் மீன் - அரை கிலோ (முள் எடுத்தது )

சோள மாவு - மூணு டேபிள் ஸ்பூன் 

அரிசி மாவு - 2 சிட்டிகை 

வெங்காயம் - ஒன்று

 தக்காளி - ஒன்று 

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் 

பட்டை - ஒரு துண்டு 

கிராம்பு - ஐந்து

 ஏலக்காய் - 3 

சோம்பு - ஒரு டீஸ்பூன் 

எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 கருவேப்பிலை - சிறிதளவு

 கொத்தமல்லி - கைப்பிடி 

எண்ணெய் - பொரித்தெடுக்க 

உப்பு - தேவைக்கு 

செய்முறை 

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கான்ஃப்ளவர் மாவு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

 இதில் மீன் துண்டுகளை போட்டு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை சுத்தமாகக் கழுவி அதில் சேர்த்து இரண்டு பக்கமும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

 அதே வாணலையில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து பொரிக்கவும்.

 கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

தக்காளி சேர்த்து வேக வைத்ததும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஒப்புதல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 பின்னர் வறுத்து வைத்த மின் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
 தனியாக தோசை கல்லில் சுக்காவை குறைவான அனலில் சுண்ட வைத்தால் சுக்கா இன்னும் சுவையாக இருக்கும் இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் மீன் சுக்கா ரெடி

Post a Comment

0Comments
Post a Comment (0)