தேவையானவை
பச்சரிசி - 2 கப்
உளுந்து - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - சிறிது
தேங்காய் பால் - ஐந்து டம்ளர் அல்லது பசும்பால் ஒரு லிட்டர்
பொரிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து உப்பு போட்டு எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் பாலில் ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் லேசாக சூடு செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக மொறுமொறுவென்று பொரித்து எடுத்து தேங்காய்ப்பாலில் போட்டு பரிமாறவும்.