1. டீ கப்புகளில் கரைகள் படிய வாய்ப்புகள் உண்டு. அப்போது சிறிதளவு உப்பை போட்டு துவக்கிவிட்டு பின்னர் சோப்பு போட்டு கழுவினால் கரைகள் அகன்று விடும்.
டீ கிளாஸ் பளபளப்பாகிவிடும்.
2. கேரட்டை வாங்கி தண்ணீர் பக்கெட்டிலோ அல்லது தண்ணீர் பாத்திரத்திலோ போட்டு வைக்க வேண்டும்.
இரவு நேரத்தில் தண்ணீரிலிருந்து எடுத்து விடவும் பின்பும் மறுநாள் காலை மீண்டும் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
இப்படி செய்து வந்தால் பிரிட்ஜில் வைக்காமலேயே பத்து நாட்கள் வரை கேரட் வாடாமல், அழுகாமல் பாதுகாக்கலாம்.
3. தக்காளி, எலுமிச்சம்பழம் இவற்றை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
4. ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் டிரேக்கலை வாரத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து முதலில் வெந்நீரிலும், பின்பு குளிர்ந்த நீரிலும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நீண்ட நாட்கள் நல்ல பையனை தரும்.
5. ஃப்ளாஷ் கை பயன்படுத்தாத நேரத்தில் அதில் சிறிதளவு சர்க்கரையை போட்டு வைத்தால் பிளாஷ்க்கை திறக்கும்போது துர்நாற்றம் வீசாது.
6.. தயிர் கெட்டியாக இல்லை என்றால் தயிரை ஒரு சல்லடையில் ஊற்றினால் தண்ணீர் கீழே இறங்கி கெட்டி தயிர் தனியாக புரிந்துவிடும்.
7. காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றை சமையல் வேலை முடிந்தவுடன் சூடாக இருக்கும் போதே ஈர துணியால் துடைத்து விட்டால் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு எல்லாம் எளிதில் சுத்தமாகிவிடும்.
8. முட்டைக்கோஸ் நறுக்கி சமைக்கும் போது அதன் நடுவில் உள்ள தண்டுகளை எரிந்து விடாமல் அவற்றை நறுக்கி சாம்பாரில் போட்டு விட்டால் சாம்பார் மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.
9. கோதுமை மாவை சலித்து அத்துடன் சிறிதளவு டேபிள் சால்டை கலந்து வைத்துவிட்டால் வண்டுகள் வராது.
10. பச்சை மிளகாய் வாங்கி வந்தவுடன் அதன் காம்புகளை அகற்றி விட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் வதங்காமல் இருக்கும்.