எள்ளு வடை, எதிரினு வந்தா பல்ல உடை

kuttybabuPPT
0
எள்ளு வடை
தேவையான பொருட்கள் 

பச்சரிசி - ஒரு கிலோ 

கடலைப்பருப்பு - மூன்று மேட்சை கரண்டி 

உளுந்தம் பருப்பு - 200 கிராம்

 பெருங்காயம் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு மேசை கரண்டி

 எள் - மூன்று மேசை கரண்டி

 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.

 பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாகி நைசாக சலிக்கவும்.

 பிறகு வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

 உளுந்தம் பருப்பையும் வறுத்து மாவாகி சலித்து இரண்டு மாவுகளையும் கலந்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அதில் ஊற வைத்த கடலைப்பருப்பு, எள், மிளகாய் தூள் கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

 வாழை இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை காய விட்டு போட்டு எடுத்தால் எள்ளுவடை முறுமுறுப்பாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)