தேவையானவை
கோதுமை ரவை - ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப்
பச்சை மிளகாய் - 4
லேசான வெற்றிலை, கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சன்னமாக உடைக்கவும்.
இத்துடன் கோதுமை ரவை, உப்பு, கருவேப்பிலை, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் .
பின்னர் வெற்றிலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்து அரைக்கவும்.
இந்தக் கலவையை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் தவாவே சூடாக்கி ஊற வைத்த மாவை சிறிய அடைகளாக ஊற்றவும் .
சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் எடுத்து புதினா சட்னி உடன் சூடாக பரிமாறவும்.