வெந்தய தோசை

kuttybabuPPT
0
வெந்தய தோசை
தேவையானவை

இட்லி அரிசி - 2 1/2 கப் 

பச்சரிசி - 1 1/2 கப் 

உளுந்து - ஐந்து டேபிள்ஸ்பூன்

 ஜவ்வரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்

 வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்

 துவரம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் 

முழு கோதுமை - ஒரு டேபிள் ஸ்பூன்

 ஓரங்களில் ஊற்ற எண்ணெய் - எட்டு டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவைக்கு 

செய்முறை 

எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்றாக கழுவி நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

 ஊறியதும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு போட்டு ஆறு முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும் .

மறுநாள் காலை தவாவில் ஊற்றி ஓரங்களில் எண்ணை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மெத்தென்று ஆனதும் எடுத்து விடவும்.
 குறிப்பு: வடகறி உடன் தொட்டு சுவைக்கவும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)