கேக் பேக் செய்யும் போது ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.
கேக் பேக் செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.
கேக் பேக்செய்யும் டின்னில் இரண்டுக்கு பிரவுன் பேப்பரை அளவுக்கு தக்கபடி வெட்டி எடுத்து வெண்ணை பூசி வைக்க வேண்டும்.
திண்ணில் முக்கால் பகுதி அளவுக்கே கேக் கலவையை ஊற்ற வேண்டும்.
கேக் பேக் செய்யப்படும்போது ஓவனை திறந்து மூடக்கூடாது. திறந்து மூடினால் கேட்கின் மென்மைத்தன்மை பாதிக்கப்படும் .
பேக் செய்யப்பட்ட கேக் நன்றாக ஆறியவுடன் பேப்பரோடு சேர்த்து கேக்கை வெளியே எடுக்க வேண்டும்.
அதனை அலுமினிய பாயிலில் பொதிந்து பாதுகாக்க வேண்டும்.
கேக்கில் சேர்க்கப்படும் மைதா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, உப்பு போன்றவைகளை மூன்று தடவை சலித்தெடுக்க வேண்டும்.
கேக்கில் சேர்க்கும் வெண்ணையில் உப்பு சேர்க்கக்கூடாது .
ஃப்ரூட் கேக் தயாரிக்கும் போது பழங்களின் விதைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்க வேண்டும் .
முந்திரி பருப்பையும் சிறிதாக நறுக்க வேண்டும்.
கேக் மீது முந்திரி வைக்கும் போது அது விழாமல் இருக்க முந்திரிப்பருப்பை பாலில் முக்கி கேக் மீது வைக்க வேண்டும்.
கேக் மென்மையாக இருக்க தேனையும் சேர்க்க வேண்டும்.
கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றும்போது அரை பாத்திரம் அல்லது அதைவிட சற்று கூடுதலாக மட்டுமே ஊற்ற வேண்டும்.