தேவையான பொருட்கள்
தோசை மாவு - ஒரு கிலோ
முருங்கைக்காய் - 5
வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து ஆறியதும் அதன் உள்ளே இருக்கும் சதை பற்றை எடுத்து மசிய வைக்கவும்.
தோசை மாவுடன் இந்த அரைத்த விழுது, வெங்காயம், தேவையான உப்பு கலந்து தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்தை எடுக்கவும்.
ஏதாவது சட்னி சாம்பாருடன் பரிமாறவும் மாறுபட்ட சுவையுள்ள தோசையை அனைவரும் விரும்பி உண்பர்.