இஞ்சி பச்சடி

kuttybabuPPT
0
இஞ்சி பச்சடி
தேவையான பொருட்கள் 

இஞ்சி - இரண்டு அல்லது மூன்று பெரிய துண்டுகள் 

புளி - ஒரு எலுமிச்சை பழ அளவு

 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

 வறுத்து அரைக்க

 கடலைப்பருப்பு  - ஒரு தேக்கரண்டி

 உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 சீரகம் - அரை தேக்கரண்டி

 வெந்தயம் - அரை தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - மூன்று முதல் நான்கு வரை

 பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு 

எள் -  அரை தேக்கரண்டி 

தாளிக்க

நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 கடுகு -  அரை தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 கருவேப்பிலை - சிறிது 

உப்பு - ஒரு தேக்கரண்டி 

வெள்ளம் - ஒரு சிறு துண்டு

 செய்முறை

இஞ்சியை நன்றாக கழுவி தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும் அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 துருவிய இஞ்சி மூன்று மேசை கரண்டி அளவுக்கு இருக்க வேண்டும்.

 புளியை ஊற வைத்து தேவையான தண்ணீரைக் கரைத்து இரண்டு அல்லது இரண்டரை கிண்ணம் அளவுக்கு புளி தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும் .

ஒரு வாணலியில் ஒரு மேசை கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி துருவலை போட்டு வதக்கவும்.

 இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

 அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பொருங்காயம் இல் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆறிதுவும் மிக்சியில் போட்டு நன்றாக பாெடித்துக் கொள்ளவும்.

 அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.

 கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுந்தம் பருப்பு , பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் புளி தண்ணீரை ஊற்றவும்.

 அதில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கொதிக்க விடவும்.

 ஓரிரு வினாடிகள் குதித்ததும் அதில் வதைக்கி வைத்துள்ள இஞ்சி துறுவளை வெள்ளம் ஆகியவற்றை சேர்த்து கிளறி இன்னமும் சில வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
 சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம் .பிரட்டுடன் சேர்ந்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)