காய்ந்த வெள்ளை சோயா பீன்ஸ் - அரை கிண்ணம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - நான்கு
கருவேப்பிலை - ஒரு கொத்து
துருவிய தேங்காய்- மூன்றுமேசை கரண்டி
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
செய்முறை
சோயா பீன்சை ஒரு நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் தண்ணீரை வடித்து குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூன்று விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
வெந்தவுடன் நீரை வடித்து வைக்கவும்.