ஓட்ஸ் பீட்சா

kuttybabuPPT
0
ஓட்ஸ் பீட்சா
தேவையானவை 

ஓட்ஸ் - அரை கப் 

மல்டி கிரெய்ன் பிரட் - 4

 தக்காளி சாஸ், சீஸ் துருவல் - தல ஒரு ஸ்பூன் 

மிகப் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வெங்காயத்தாள், தக்காளி - ஒரு கப் 

ஆரிகானோ சில்லி பிளக்ஸ் தலா - இரண்டு ஸ்பூன் 

உப்பு - ருசிக்கு ஏற்ப 

செய்முறை 

ஓட்ஸையும், பிரட்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

 பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டைகள் ஆக்கவோம்.

 அடுப்பில் தவாவை குறைந்த சூட்டில் வைக்கவும்.

 பிசைந்த உருண்டையை தவாவில் போட்டு வட்டமாக பீசா போல் கைகளால் தட்டவும்.

 அதன் மீது தக்காளி சாஸ் தடவி சீஸ் துருவல், நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும் .

பின்னர் ஆரிகானோ சில்லி ஃப்ளேக்சைத் தூவி தவாவை மூடவும்.
 பீட்சாவின் அடிப்பாகம் நன்றாக சிவந்து சீஸ் உருகும் போது எடுத்து சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)