தேவையானவை
புரோன் அல்லது கருப்பு நிற கொண்டைக்கடலை - அரை கிலோ
பிரஸ் தேங்காய் பூ - மூன்று கப்
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
சின்ன வெங்காயம் உரித்தது - 10
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்றல் - ஐந்து
கடுகு, சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு ,தண்ணீர் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
கொண்டைக்கடலையை சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து அலம்பி மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் மலர வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் பூவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பின்னர் அதே எண்ணெயில் மிளகாய் வற்றல் ,கருவேப்பிலை வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
கடுகு, சீரகம், தாளித்து செய்து அதில் அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின்னர் வெந்த கொண்டக்கடலையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி இலை மிக்ஸ் பண்ணி இறக்கி தேங்காய் புட்டுடன் சாப்பிட சுவையோ சுவை.