கானங்கத்த மீன் புட்டு

kuttybabuPPT
0
கானங்கத்த மீன் புட்டு
கானங்கத்த மீன் - ஒரு கிலோ 

துருவிய தேங்காய் - 200 கிராம்

 வெங்காயம் - 400 கிராம்

 பச்சை மிளகாய் - 10 

இஞ்சி -  50 கிராம்

 பூண்டு - 100 கிராம் 

மிளகுத்தூள் - 100 கிராம்

 சீரகத்துள் - 50 கிராம்

 மஞ்சள் தூள் ,கறிவேப்பிலை, கொத்தமல்லி தலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 150 மில்லி 

செய்முறை 

முழு மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு போட்டு சூடான நீரில் கொதிக்க வைக்கவும்.

 பின்னர் மீனிலியிலிருந்து முள்ளை எடுத்துவிட்டு சதையை மட்டும் எடுத்து நன்கு பிசையவும்.

 முள் இல்லாத மீனில் சதைப்பகுதியை நன்கு பிழிந்து எடுத்து நீர் இல்லாதவாறு செய்து கொள்ளவும்.

 தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கருவேப்பிலை ,கொத்தமல்லி தழை, உப்பு மற்றும் மீனின் சதை பகுதி ஆகியவற்றை நன்கு பிசைந்து கலவை போல் வைத்துக் கொள்ளவும்.

 இப்போது அடுப்பின் மீது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி இந்த பிசைந்த கலவையை போட்டு நன்கு வதக்கவும்.

 துருவிய தேங்காயை மேலே தூவவும்.
 10 முதல் 15 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் நன்கு வதங்கிய பின் உப்பை சரி பார்த்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி கீழே இறக்கி வைத்தால் கானங்கத்த மீன் புட்டு தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)