தேவையானவை
கோதுமை ரவை - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் தலா - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் .
இதில் ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும் .
பிறகு உப்பு சேர்த்து ரவையை தூவி கிளறி வேகவிட்டு வறுத்த கடலையை உடைத்து போட்டு எல்லாம் நன்கு கலந்து வரும்படி கிளறவும் .
கடைசியாக எலுமிச்சை பழம் பிழிந்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.