உருண்டைக்கு
துவரம் பருப்பு - ஒரு ஆளாக்கு
உழுந்து - ஒரு மேசை கரண்டி
உப்பு, தேங்காய் துருவல்,பச்சை மிளகாய் - ஒன்று
மிக மிக பொடியாக அறிந்த - வெங்காயம்
சமையல் சோடா - 2 சிட்டிகை
அறிந்த கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - தாளிக்க
குழம்பிற்கு
புளித்தமோர் - ஒரு லிட்டர்
கொத்தமல்லி தழை - அறிந்தது
அரைப்பதற்கு தேங்காய் துருவல் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - ஒன்னரை மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -இரண்டு
சிவப்பு மிளகாய் - இரண்டு
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ,உப்பு - தேவைக்கு ஏற்ப
தாழிப்பதற்கு
எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகத்துள், பெருங்காயத்தூள், கருவேப்பில்லை
செய்முறை
துவரம் பருப்பு, உளுந்து கழுவி தகுந்த தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரை முழுவதும் வடித்து சிறிது சீரகம் ,தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து கரகரப்பாக மசால் வடை மாவு போல அரைத்து எடுக்கவும் .
மிக்ஸியில் அரைத்த விழுதில் ஒரு மேசை கரண்டி அளவு அப்படியே இருக்கட்டும்:
அதோடு குழம்பு சாமான்களை சேர்த்து தகுந்த தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை அகல பாத்திரத்தில் ஊற்றவும்.
அதே மிக்ஸியில் தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இறக்கி மோராக்கி உற்றவும்.
உருண்டைக்கு அரைத்ததை கிண்ணத்தில் எடுத்த பிறகு வெங்காயம், கொத்தமல்லி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை சோடா சேர்த்து கலந்து உருண்டைகள் செய்து நெய் பூசிய குக்கர் தட்டில் தகுந்த இடைவெளி விட்டு அடுக்கி ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும் .
மோர் குழம்பு கொதி வந்ததும் இதை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கரண்டி போடக்கூடாது .
சாப்பிடும் போது கவனமாக கரண்டியால் எடுத்து உண்ணவும் மிக மிக சுவையாக இருக்கும்.