கிச்சன் டிப்ஸ் கேட்டுக்காேங்க ப்ரண்ட்ஸ்

kuttybabuPPT
0
கிச்சன் டிப்ஸ் கேட்டுக்காேங்க ப்ரண்ட்ஸ்
1. தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய் வற்றல் காம்புகளை போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து தோசையும் நன்றாக இருக்கும்.

  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற ரோஸ்ட் கறி பண்ணும் போது கடைசியில் ரஸ்க் தூளை கொஞ்சம் தூவி ஒரு புரட்டு புரட்டி எடுத்தால் கறி ஏக ருசியாக இருக்கும்.

3.  இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலை காம்பை கில்லாமல் அப்படியே பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

4. புட்டு மிருதுவாக இருக்க மூன்றில் ஒரு பாகம் புழுங்கல் அரிசியும், இரண்டு பாகம் பச்சை அரிசியும் சேர்த்து அரைக்க வேண்டும்.

5. லேசாக இருக்கும் முருங்கைக் கீரையை பறித்து நன்றாக கழுவி விட்டு, அடுப்பில் எண்ணெய் விட்டு முருங்கைக் கீரையை உப்பு போட்டு நன்றாக வதக்கி விட்டு ,அதை சப்பாத்தி மாவுடன் போட்டு நன்றாக பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக இட்டு சாப்பிடலாம்.

6. மோர் மிளகாய் தேவைக்கு அதிகமாக வறுத்து மிச்சமாகிவிட்டால் நமத்து போகும். இதை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசைக்கு சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம் காரம் அதிகம் இருந்தால் இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்து அரைத்து தொட்டுக்கொள்ள சுவையும் ,மனமும் நன்றாக இருக்கும்.

7. ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் வராது .

8. இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டையை சிறிது அதிகமாக சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும் .

9. சேப்பங்கிழங்கை வேக வைத்து ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து தோல் உரித்து வெட்டினால் வலுவலுப்பு இருக்காது.

10. பூரிக்கு மாவு பிசையும் போது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்றாக உப்பியும் வரும்.

11. பூரி மாவு பிசையும் போது ஒரு மேசை கரண்டி கான்பிளவர் சேர்த்தால் பூரி மிருதுவாகவும் இருக்கும்.

12.  வெண்டைக்காயை கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் முறுமுறுப்பாய் சுவையாக இருக்கும். வழு வழுப்பாகவும் இருக்காது.

13. பட்சணங்கள் செய்யும் போது ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றி பிசைந்து கொண்டால் பட்சணங்கள் எண்ணையை குடிக்காது .

14. மிளகாய் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது .

15. காய்ந்து எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது.

16. கோதுமை மாவோடு கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

17. தேங்காய் துவையல் செய்யும் போது கொஞ்சம் தனியாவையும் சேர்த்து அரைத்தால் துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.
18, கொஞ்சம் உளுந்தம் பருப்பை ஊறவைத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)