தேவையான பொருட்கள்
மட்டன் - கால் கிலோ
பச்சை பட்டாணி அல்லது காய்ந்த பட்டாணி - அரை கப்
உருளைக்கிழங்கு, தக்காளி - தல ஒன்னு
சோம்பு - கால் கரண்டி
முந்திரி பருப்பு - ஐந்து
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கடல்பாசி - 2
கிராம்பு , பிரிஞ்சி இலை - தலா ஒண்ணு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
பச்சை பட்டாளியை வேக வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும் .
உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, கடல் பாசி, சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய் , தக்காளி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து சிறிய தீயில் வைத்து வதக்கவும் .
வெந்த பட்டாணி மற்றும் உருளை துண்டுகளை போட்டு உப்பு சேர்க்கவும்..
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்த மட்டனை போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.