தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 10
கொத்தமல்லி தழை - ஒரு கப்
கருவேப்பிலை - கால் கப்
பச்சை மிளகாய் - ஏழு
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - சிறு துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும் .
பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கலக்கவும்.
கலவை ஆறியதும் பசை போல அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக உப்பு சேர்த்து கலக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு தாளிக்கவும் .
இதை தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும்.
இப்போது நெல்லிக்காய் சட்னி தயார்.