சுறா புட்டு

kuttybabuPPT
0
சுறா புட்டு
தேவையானவை 

சுறா மீன் - ஒரு கிலோ

 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

 மிளகுத்தூள் - இரண்டு தேக்கரண்டி

 சோம்பு - அரை தேக்கரண்டி 

பூண்டு - பத்து 

இஞ்சி - ஒரு துண்டு 

சின்ன வெங்காயம் - 10 

பச்சை மிளகாய் - 3 

எலுமிச்சை சாறு - பாதி 

கருவேப்பிலை - சிறிதளவு

 நல்லெண்ணெய் , உப்பு - தேவைக்க ஏற்ப 

செய்முறை 

முதலில் சுறா மீன்களை துண்டு போட்டு அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

 பின் அறிந்தவற்றை இட்லி தட்டில் ஒரு துணி போட்டு அதன் மீது வேக விடவும்.

 இது ஆறியதும் தோல் மற்றும் முல்லை எடுத்துவிட்டு மீன் துண்டுகளை உதிர்த்துக் கொள்ளவும்.

 பின்னர் வாணலையை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 பின்னர் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறி அதன் நீர் வற்றும் வரை வதக்கவும்.
 இறுதியாக மிளகுத்தூள், எலுமிச்சை சாறு பிழிந்தால் சுறா புட்டு ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)