தானிய உருண்டை

kuttybabuPPT
0
தானிய உருண்டை
தேவையானவை 

கம்பு, கேழ்வரகு, பச்சைப்பயிறு, முழு கோதுமை, பொட்டுக்கடலை, வெள்ளை சோளம், வேர்க்கடலை, அரிசி, ஜவ்வரிசி - தல கால் கப் 

வெல்லத் துருவல் அல்லது சர்க்கரை - 2 கப் 

நெய் - கால் கப் 

செய்முறை 

அனைத்து தானியங்களையும் தனித்தனியே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மாவு மெஷினில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும் .

இதில் வெல்லத் துருவல் கொட்டி சூடாக காய்ச்சின நெய் ஊற்றி கை பொறுக்கும் பதத்தில் உருண்டையாக பிடிக்கவும்.

 அருமையான ருசியுடன் சத்தான ஆரோக்கியமான உருண்டை இது.

 இரண்டு மாதங்கள் வரை கூட வைத்திருந்து சாப்பிடலாம்.
 பொடியாக நறுக்கிய முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து உருண்டை பிடித்தால் இன்னமும் ருசியாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)