தேவையானவை
அரிசி - 200 கிராம்
சோளம் உரித்தது, பாசிப்பருப்பு வறுத்தது - தலா ஒரு கப்
மிளகு, சீரகம் சேர்த்து பொடித்தது - இரண்டு டீஸ்பூன்
நெய் - 100 மில்லி
கருவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிது
செய்முறை
அரிசி, பாசிப்பருப்பு, சோளம் மூன்றையும் ஒன்று சேர்த்து ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு லேசாக சூடானதும் மிளகு, சீரகப்பொடி போட்டு கருவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்.
இதை வேக வைத்து அரிசி பருப்பு கலவையுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு மசித்து கிளறி பரிமாறவும்.