தேவையானவை
பாசிப்பருப்பு - 100 கிராம்
சீரகம் - 10 கிராம்
முருங்கைக்காய் - ஒன்னு
பீன்ஸ் - 4
கேரட் - ரெண்டு
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 10
சிறு வெங்காயம் - 10
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு
தாளிக்க
நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, கருவேப்பிலை - தேவைக்கு
எலுமிச்சம் பழம் - அரை அளவு
பக்குவம்
தேங்காயை அரைத்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான தேங்காய் பால் எடுக்க வேண்டும்.
பின்பு இரண்டாம், மூன்றாம் தேங்காய் பாலையும் நீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
பாசிப்பருப்பை லேசான மனம் வரும் அல்லது வறுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய் பாலில் நீல வாக்கில் நறுக்கிய மேற்கண்ட காய்கறிகளையும் எண்ணெயில் லேசாக வதக்கிய பூண்டு, சிறு வெங்காயத்தையும் சேர்த்து வேக விடவும்.
காய்கறிகள் வெந்து வரும்போது இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளவும்.
இதில் நாம் எடுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
இந்த குழம்பில் வேகவைத்த பாசிப்பருப்பை மசித்து சேர்த்து கிளறவும் .
நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி விடவும்.
அடுத்ததாக வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் கலந்து மீண்டும் ஒரு கொதி வரும் அல்லது குழம்பினை அடுப்பில் இடவும்.
கடைசியாக கெட்டியான முதல் தேங்காய் பாலை குழம்பில் ஊற்றி சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கிளறவும்.
கெட்டியான தேங்காய் பாலை கலந்த பின்பு குழம்பை கொதிக்க விடக்கூடாது.
இப்போது சுவையான சொதி குழம்பு தயார்:
இந்த குழம்பானது இடியாப்பம், தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பாக இருக்கிறது .
இது மட்டும் இன்றி சொதி குழம்பு பின்வரும் மேலும் பல வகைகளில் வைக்கின்றனர் .
நம் நெல்லை மக்கள் உதாரணமாக பசும்பால் சேர்த்து பால் சொதி, அசைவம் சேர்த்து இறால் சொதி, மீன் சாெதி, கீரைகளை சேர்த்து கீரை சொதி, தக்காளி சோதி, மாங்காய் சொதி என பல வகைப்பட்ட சொதி குழம்புகள் நெல்லை மக்களின் வீடுகளிலும் விசேஷங்களிலும் சிறப்பு பெற்று திகழ்கின்றன.