தேவையானவை
முற்றிய வெள்ளை பூசணி துருவியது - இரண்டு கப்
சர்க்கரை - ஒன்றை கப்
வறுத்த முந்தரி, திராட்சை தலா - 25 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
நெய் - 100 கிராம்
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்
செய்முறை
பூசணி துருவலை பிழிந்து நீரை நீக்கவும்.
அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி பூசணி துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி சர்க்கரையை சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து வேகும் போது நெய் சேர்த்து கிளறவும் .
சற்றே தளர இருக்கும்போது ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி அல்வா பதம் வரும்போது இறக்கவும்.
ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்த முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை தூவி அலங்கரித்து பரிமாறவும்.