தேவையான பொருட்கள்
பாதாம், பிஸ்தா, முந்திரி தலா - 20 கிராம்
திராட்சை மற்றும் பேரிச்சை - 20 கிராம்
பால் - அரை லிட்டர்
சேமியா - கால் கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
சீனி - கால் கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து சேமியாவை வறுத்துக் கொள்ள வேண்டும் .
அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக விட வேண்டும்.
சேமியா வெந்ததும் சீனி தேவைக்கேற்ப சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதில் வறுத்தப்பருப்புகள், திராச்சை, பேரிச்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.