பாலக் கீரை சூப்

kuttybabuPPT
0
பாலக் கீரை சூப்
தேவையான பொருட்கள்

பாலக்கீரை - கட்டு 

மிளகு, சீரகம் - தேவையான அளவு

 பாசிப்பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு கப் 

வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப்

 வெள்ளை பூண்டு - ஐந்து

 கல் உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

தக்காளி, வெங்காயம், கீரை, வெள்ளைப்பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 கீரையுடன் மிளகு, சீரகம், வெள்ளை பூண்டு, வெங்காயம் , தக்காளி, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

 ஆறியபிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

 அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)