கருப்பட்டி கொழுக்கட்டை

kuttybabuPPT
0
கருப்பட்டி கொழுக்கட்டை
தேவையானவை 

அரிசி மாவு - ஒரு கப்

 கருப்பட்டி - அரை கப் 

தேங்காய் துருவல் - ஒரு கப் 

ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

 பொட்டுக்கடலை மாவு - இரண்டு டீஸ்பூன் 

நல்லெண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்

 தண்ணீர் - ஒன்றே கால் கப்

 உப்பு - ஒரு சிட்டிகை

 செய்முறை 

கடாயில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.

 கொதித்து வரும் போது அரிசி மாவு தூவி கட்டி இல்லாத கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும்.

 கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாகி கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும்.

 கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவு கலவியில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும்.
 அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)