தேவையான பொருட்கள்
அவல் - முக்கால் கப்
காய்ந்த மிளகாய் - இரண்டு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
முந்திரிப்பருப்பு - நான்கு ( உடைத்தது)
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
அவலை நன்றாக தண்ணீரில் களைந்து ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு ,கடுகு ,மிளகாய், உடைத்த முந்திரி போன்றவற்றை போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை பாெட்டு வதக்கவும்.
அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் .
பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.