தேவையானவை
பாப்கார்ன் சோளம் - ஒரு கப்
நட்ஸ் சாக்லேட் - 50 கிராம்
பட்டர் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பாெடித்து போடவும்.
வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும் .
உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் அல்லது பட்டர் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பாப்கானை போட்டு உப்பு சேர்த்து மூடியால் மூட விடவும்.
பொறிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும் .
பிறகு தயாரித்து சாக்லேட் சிறப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.
நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.
சூப்பரான சாக்லேட் பாப்கான் ரெடி.