தேவையான பொருட்கள்
தோசை மாவு - இரண்டு கரண்டி
முட்டை - ஒன்னு
வெங்காயம் - ஒன்னு
கொத்தமல்லி தலை - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பட்டர் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும்.
முட்டையை உடைத்து சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
தோசை கல்லில் இரண்டு கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும்.
சிறிது தடிமனாக இருந்தால் நல்லது.
அடித்து வைத்த முட்டையை தோசை மீது ஊற்றவும் .
பின்னர் திருப்பிப்போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும் .
அந்த முட்டை தோசையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும் கடாயில் பட்டர் அல்லது நெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
பாதி வதங்கியதும் தோசை துண்டுகளை சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும் .
கடைசியாக மிளகு, சீரகப்பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூடான சூப்பரான கொத்து தோசை ரெடி.