தேவையான பொருட்கள்
தினை அரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
சுக்குத்தூள் - இரண்டு சிட்டிகை
முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்
நெய் - 100 கிராம்
செய்முறை
திணை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கிளறவும்.
கட்டியாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
இடைவிடாமல் சிறிது சிறிதாக நீர் சேர்க்கவும் .
அல்வா சட்டியில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.
சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.