பீஸ் மசாலா

kuttybabuPPT
0
பீஸ் மசாலா
ஒரு ஆழாக்கு வெள்ளை பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

 சிறிதளவு சோயா உருண்டைகளை சிறிது நெய்யில் வறுக்கவும்.

 பட்டாணியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில்கள் வந்ததும் அணைக்கவும் .

மூடியை திறந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய் துருவல், ஆம்சூர் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து மறுபடியும் மூன்று விசில்கள் வேக வைக்கவும்.

 மூடியை திறந்ததும் வறுத்த சோயா, வேக வைத்து மசித்த பட்டாணியை சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி கெட்டிப்பட்டதும் இறக்கிப் பரிமாறவும் .

குறிப்பு 

இதை கிரேவியாக உபயோகிக்கலாம்.

 பிரட்டின் மீது ஊற்றி  அனைவருக்கும் தரலாம்.
 டயட்டில் இருப்பவர்கள் ஒரு பிரட் ஸ்லைஸில் நிறைய கிரேவிகளை சேர்த்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)