அல்வா பூரி

kuttybabuPPT
0
அல்வா பூரி 
தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 250 கிராம்

 பாதாம் ஊறவைத்தது - 50 கிராம்

 தேங்காய் துருவியது - அரை மூடி

 கோவா - 100 கிராம்

  பால் - மூணு கப் 

நெய் - ஒரு கப் 

உலர்ந்த திராட்சை - 50 கிராம் 

ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

 சர்க்கரை - 350 கிராம் 

மைதா - 250 கிராம்

 உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான  அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை

கடலைப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி குழையும் வரை வேக வைக்கவும்.

 ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 பிறகு ஊறவைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 ஒரு வாணலியில் ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சியை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

 அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

 பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா , பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்து மிதமான தீயில் கிளறவும்.

 பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும்.

 மைதாவை பாத்திரத்தில் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய், அரைக்கப்பு பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும் ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
 சூடான சுவையான அல்வா பூரி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)