ஒன்றை டேபிள்ஸ்பூன் -சாமை அரிசியை வானொலியில் போட்டு நன்றாக மனம் வரும் வரை வறுக்கவும்.
ஆறியதும் கழுவி சிறிய பிரஷர் பானில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு பூண்டு பற்களை இடித்து சேர்க்கவும்.
பின்னர் மிகப் பொடியாக நறுக்கிய அரைக்கீரையை சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு
வெவ்வேறு தானியங்கள், கீரை மட்டுமல்ல பல காய்கறிகள், பட்டாணி போன்ற சுண்டல் வகைகள் சேர்த்தும் இதுபோல சூப்பு செய்யலாம் .
பால் சேர்த்தும் குடிக்கலாம்.
சிறு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இந்த சூப்பை குறைவாக குடித்தாலே போதுமானது.