கால் கிலோ வெண்பூசணியை தோல் விதை நீக்கி நறுக்கவும் .
அதனுடன் ஒரு ஆப்பிளை தோல் சீவி நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஆப்பிள், நான்கு இலை பாலக்கீரை, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து பூசணி துண்டுகளை சேர்த்து அரைத்து வடிகட்டவும் .
பின்னர் சிட்டிகை உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு , தேன், சாட் மசாலாத்தூள் சேர்த்து மிகவும் மெதுவாக உறிஞ்சி குடிக்கவும் .
குறிப்பு
பூசணி போன்ற நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் அதிகம் உண்ணலாம்.
வயிறு நிறையும் .
சாறாக அருந்தினாலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
கெட்ட கொழுப்பும் தாங்காது.