நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு டேபிள்
ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - ஒரு மூடி
தக்காளி - 2
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - ரெண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி, கருவேப்பிலை, எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
நண்டை நன்றாக சுத்தம் செய்து மூன்று முறை தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும் .
தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகு ஒரு டீஸ்பூன், சோம்பு சேர்த்து நைசாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு கழுவி வைத்த நண்டை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து அனலை குறைத்து நன்கு கிளறவும்.
நண்டு நிறம் மாறியதும் அரைத்து வைத்த தேங்காயை சேர்க்கவும்.
அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம் .
பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு நன்கு வேக விடவும் .
வெந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலையை தூவவும்.
நண்டு மசாலா தயார்