# வெண்டைக்காயின் வழுவழுப்பு மாற வதக்கும்போது வெண்டைக்காய் மீது மோராே அல்லது புளிக்கரைத்த நீரை தெளித்தால் போதும் .
# இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
# வெங்காய பக்கோடா செய்யும் போது பாதி வெங்காயம், சிறிது இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்தால் வாசனை தூக்கும்.
# பனி நாட்களில் தயிர் சாதத்திற்கு சுக்கு பொடி சிறிதளவு அல்லது ஓமம் தாளித்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும் மேலும் சளி பிடிக்காது.
# பிள்ளைகளுக்கு மோர் ரசத்தில் ஓமம் தாளித்து போட்டு வைத்து ஊற்றி சாப்பிட்டால் பனி நாட்களில் சளி பிடிக்காது .
# வடைக்கு அரைத்த மாவை எண்ணெயில் போடுவதற்கு முன் வெறும் வாணலியில் ஒரு கிளறு கிளறினால் ஈரப்பதம் போய்விடும். பிறகு வடை செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது.
# ரவை உப்புமா செய்யும் போது இரண்டு ஸ்பூன் அவல் அல்லது ஓட்ஸ் கலந்து செய்தால் சுவை கூடும்.
# சாலட் செய்யும் போது கடிக்க கஷ்டமாக இருந்தால் மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி சாப்பிட்டால் சுவையும் இருக்கும் பல் வலிக்காது.
# பிரயாணங்களுக்கு சப்பாத்தி எடுத்து செல்லும் போது அதை மிருதுவாக இருக்க அதை வைத்திருக்கும் டப்பாவில் சில இஞ்சி துண்டுகளை போட்டு வைக்கவும் .
# காய்ந்த வேப்பம்பூ மற்றும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, மிளகு இவைகளை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
# கடலைப்பருப்பு போளிக்கு வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்க மிக சுவையாக இருக்கும்.
# இட்லி மாவு, கொஞ்சம் கடலைமாவு, காரப்பொடி ,உப்பு , பெருங்காயம், கொத்தமல்லி தழை கலந்து மொச்சை பருப்பையும் போட்டு கிளறி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொச்சை பக்கோடா கரகரவென்று சூப்பர் டேஸ்டில் தூள் கிளப்பும்.
# தயிர் பச்சடி செய்ய வேண்டுமா ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து ஆறியதும் தயிர் உப்பு நறுக்கிய கொத்தமல்லி கீரிய மிளகாய் சேர்த்து கடுகு தாளிக்கவும்.
# அரை ஆழாக்கு பச்சரிசி, அரை ஆழாக்கு புழுங்கல் அரிசி இரண்டையும் ஊற வைத்து ஒரு பெரிய உருண்டை சாதத்தோடு சேர்த்து நைசாக அரைத்து ஒரு கரண்டி இளநீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து அரைத்த மாவில் சேர்த்து துளி சோடா உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மறுநாள் தேங்காய் பால் சேர்த்து கரைத்து ஆப்பமாக ஊற்றினால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும் .
# கேக் செய்யும்போது கலவையில் சிறிதளவு தேன் கலந்தால் சுவையான மிருதுவான கேக்கு தயார்.
# கசப்பு வாய்ந்த காய்கறிகளை நறுக்கி அரிசி களைந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கும்.
# கிழங்குகளை உப்பு கரைத்த நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின் வேக வைத்தால் சீக்கிரம் வேகும்.
# ரவை உப்புமா கிளறும்போது தண்ணீரோடு மோர் கலந்து உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.
# உளுந்தும் வடை மாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு கலந்து வடை தட்டினால் வடை அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்கும் .
#வறுவல் ,கூட்டு இவற்றில் உப்பு அதிகமாகி விட்டால் உலர்ந்த பிரட் அல்லது ரஸ்கை மிக்ஸியில் போட்டு துவலாம்.
# கடாயில் சிறிது தேங்காய் துருவல், கருவேப்பிலை, புளி, பச்சை மிளகாய், கல் உப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.