தேவையானவை
பலாச்சுளை - 15
பச்சரிசி மாவு - அரை கிலோ
வெல்லம் - அரை கிலோ
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி பருப்பு - 10
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 10
எண்ணை - 300 கிராம்
செய்முறை
பலாச்சுளைகளை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கூலாக அரைக்கவும்.
தேங்காய் துருவல், முந்திரியை விழுதாக அரைக்கவும் .
ஏலக்காயை தூளாக்கவும்.
வெல்லத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அதில் பச்சரிசி மாவு, பலாப்பழக்கூழ், தேங்காய், முந்திரி விழுது & ஏலக்காய் தூள், நெய் கலந்து நன்கு கெட்டியாக கிளறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு கலவையை எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வந்ததும் பரிமாறவும்.