கோழிக்கறி - அரை கிலோ
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை மேசை கரண்டி
பார்பிக்யூ மசாலா (திப்பிலி சீரகம் அதிமதுரம் அரைத்த மசாலா) - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசை கரண்டி
தயிர் - ஒரு மேசை கரண்டி
தனியா தூள் - கால் மேசை கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுக்க
பக்குவம்
கோழியை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,தயிர் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் உட்பட மற்றும் மசாலா தூள் கலந்து சிக்கனில் தடவி சில இடங்களில் கத்தியால் கீறி மசாலாவை நிரப்பி குளைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .
பிறகு கரியை கொண்ட பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி ஊறவைத்த கோழியின் மேல் எண்ணெயை தடவி அதனை வாட்டி எடுக்க வேண்டும்.
பின்னர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் வாட்ட வேண்டும்.
கடைசியாக எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வேண்டும்.