கோதுமை மாவு - ஒரு கிண்ணம்
பேரிச்சம்பழம் - 4
பாதாம் , முந்திரி - தலா எட்டு
காய்ந்த திராட்சை - 10
உப்பு -ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
செய்முறை
பாதாமை ஊற வைத்து தோலை நீக்கிக் கொள்ளவும் .
பேரிச்சம்பழம் முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சையை ஊற வைக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் சிட்டிகை உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.
சூடான தவாவில் நெய் தடவி சப்பாத்தியை போட்டு சுட்டு எடுக்கவும்