தேவையானவை
இட்லி மாவு - நான்கு கிண்ணம்
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு மேசை கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு ,எண்ணை - தேவையான அளவு
செய்முறை
மினி இட்லி வேக வைத்து எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி தலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆரம்பிக்கவும்.
பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் .
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி சட்னி இட்லிகளை போட்டு கிளறி எடுக்கவும்.