பாலக் பூரி

kuttybabuPPT
0
பாலக் பூரி
தேவையானவை

கோதுமை மாவு - இரண்டு கிண்ணம்

 பசலை கீரை - ஒரு கட்டு

 பச்சை மிளகாய் - மூணு 

இஞ்சி - ஒரு துண்டு 

நெய் - இரண்டு தேக்கரண்டி 

உப்பு, எண்ணை - தேவையான அளவு

 செய்முறை

கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

 அதனுடன் பச்சை மிளகாய் , இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கவும்.

 பின்பு அதை ஆற வைத்து நீரை வடித்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.

 இந்த விழுதுடன் கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 பின்னர் அதை சின்ன சின்ன பூரிகளாக செய்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)