தேவையானவை
தோசை மாவு - இரண்டு கிண்ணம்
காலிஃப்ளவர் - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒரு கிண்ணம்
தக்காளி - இரண்டு
முந்திரிப்பருப்பு - ஆறு
தேங்காய் துருவல் - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு ,உப்பு ,எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
காலிபிளவரை சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் ,முந்திரி சேர்த்து விழுதாக அரைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும் .
பின்பு தக்காளி, காலிபிளவர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
அடுப்பில் தவாவை காய வைத்து கனமான தோசையை வார்க்கவும்.
பின்பு அதன் மேல் பரவலாக காலிபிளவர் மசாலாவை தடவி மடிக்காமல் திருப்பி போட்டு எடுக்கவும்.