தேவையானவை
கருப்பட்டி - 200 கிராம்
கோதுமை - 200 கிராம்
அரிசி - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - 100 மில்லி
செய்முறை
கோதுமை, அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கலைந்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
கருப்பட்டியை பிடித்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி அரைத்த மாவுடன் கலந்து, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
தோசை கல்லை சூடாக்கி மாவை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.