கம்பு மசாலா கொழுக்கட்டை

kuttybabuPPT
0
கம்பு மசாலா கொழுக்கட்டை
தேவையானவை

கம்பு - ஒரு கப் 

வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று

 வெங்காயம் நறுக்கியது - ஒன்று

 இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 தண்ணீர் - ஒன்றை கால்கப் 

எண்ணெய் - குட்டி ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

கடாயில் தண்ணீர், உப்பு ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சுடவைத்து கொதித்து வரும்போது கம்பு மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும்.

 உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

 இத்துடன் வெங்காய துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு கலந்து பிசைந்து சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும்.

 கையில் எண்ணெய் தடவிக் கொண்டு கம்பு மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழித்து மசாலா கலவையை உருண்டையை அதில் வைத்து மூடவும்.
 அப்படியே ஆவியில் வேக விடவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)