சற்று கசப்பு சுவைதான் எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும்போது அதிகம் தெரியாது.
பாகற்காய் போன்றே இருக்கும்.
தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
கசப்பு தன்மை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
சுண்டல் வத்தல் - 50 கிராம்
( பக்குவமான முறையில் செய்து செய்த வத்தல் பெற்றிட )
மிளகு தக்காளி வத்தல் - 25 கிராம்
மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் - மூன்று அல்லது நான்கு
மிளகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு பிடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிது
ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
செய்முறை
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம் வறுக்கவும் .
இறுதியாக கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வறுத்தெடுக்கவும் .
ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும் .
ஆரோக்கியமாக வாழ்வு வாழ்ந்திடலாம்.