தேவையானவை
முளைவிட்ட கொள்ளு, முளைவிட்டு கொண்டைக்கடலை, முழைவிட்ட பச்சை பயிறு - தலா 100 கிராம்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு பல் - ரெண்டு
காய்ந்த மிளகாய் - ஒன்று
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொள்ளு, கொண்டைக்கடலை, பச்சைபயிறு ஆகியவற்றுடன் தோல் சீவி நறுக்கிய இஞ்சி , உரித்து பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும்.
முளைவிட்டு இருப்பதால் தண்ணீரில் ஊற வைக்க தேவையில்லை.
இதனுடன் உப்பு, கருவேப்பிலை சேர்த்து மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.