திணை பன்னீர் கட்லட்

kuttybabuPPT
0
திணை பன்னீர் கட்லட்
தேவையானவை 

பன்னீர் - 25 கிராம் துருவியது

 தினை மாவு - ஒரு கிண்ணம்

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி 

வெங்காயம் நறுக்கியது - ஒன்று

 பச்சை மிளகாய் நறுக்கியது - 2 

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி 

சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

 புதினா நறுக்கியது - இரண்டு தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் பொறிப்பதற்கு - தேவையான அளவு

 செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகுத்தூள், உப்பு, புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கட்லெட் களாக தட்டிக் கொள்ள வேண்டும்.

 பின்பு ஒரு கிண்ணத்தில் பாதி அளவு திணை மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் கட்லெட் நினைத்து மீதமுள்ள திணை மாவில் புரட்டிக் கொள்ள வேண்டும்.

 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கட்லெட் களை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
 சுவையான தினை பண்ணீர் கட்லெட் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)