தேவையானவை
பீட்ரூட் ஜூஸ் கெட்டியாக - மூன்று கப்
தேங்காய் பால் கெட்டியாக - ஒரு கப்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
வறுத்த முந்திரி - 10
காய்ச்சியப்பால் அல்லது கோவா - 250 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் ஒரு கரண்டி நெய்யை விட்டு பீட்ரூட் ஜூஸ், கோவா அல்லது காய்ச்சிய பால் மற்றும் தேங்காய் பாலை ஒன்றாக கலந்து அதனை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நன்கு அடி பிடிக்காமல் கிளறவும்.
பின் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் குங்குபூப்பு சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்.
அதனுடன் வறுத்த முந்திரி மற்றும் மீதமுள்ள இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அல்வாவை நன்கு கிளறி இறக்கினால் ஆரோக்கியமான இரும்புச்சத்து நிறைந்த சுவையான பீட்ரூட் தேங்காய் பால் அல்வா ரெடி .
தேங்காயில் முதல் முறை எடுக்கும் கெட்டிப்பால் போதுமானது.
பீட்ரூட் ஜூஸ் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.