தேவையான பொருட்கள்
நண்டு - இரண்டு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறு துண்டு
மிளகு அரைத்து - ஒரு கரண்டி
சீரகம் -கால் தேக்கரண்டி
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
பூண்டு - நாலு பல்
பச்சை மிளகாய் - 2
பட்டை - ஒரு சிறு துண்டு
பிரியாணி இலை - ஒன்னு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
நண்டு சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.
உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை , பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
நன்றாக வதக்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் தேவையான அளவு ஊற்றவும்.
தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.
நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்துள் போடவும்.
நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச்சுட பரிமாறவும்.